சி.ஜ.க. விலை உயர்வை எதிர்க்கிறது.
அன்பார்ந்த புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர்களே,
வீடமைப்புக்கழகம் ஃபஜார் சந்தையை பல்பொருள் அங்காடியாக மாற்ற ஷெங் ஷியோங் நிறுவனத்திர்க்கு அனுமதி கொடுக்கவில்லை என்று அறிவித்தாலும், கேள்விகளும் அச்சமும் இன்னும் நிலவுகின்றன. இம்மாற்றத்தால் அன்றாட பொருள்களின் விலை பற்றியும், இப்போதுள்ள கடைக்காரர்களின் எதிர்கலாமும் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இதர்க்குக் காரணம் ஷெங் ஷியோங் சந்தையை குளிர்சாதனத்தோடு 24 மணி நேரமும் நடத்த திட்டமிட்டிருக்கிறது என்பதே. சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் அக்கறை எல்லாம் இம்மாற்றத்தால் வியாபாரச் சிலவுகள் அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு சிலவுகள் வாடிக்கையாளர்களாகிய உங்களிடம் சுமத்தப்படும். அதோடுமற்றுமல்லாது, கடைக்காரர்களும் 24 மணிநேர கட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவார்கள்.
நீங்கள் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவினங்களின் அழுத்தத்தால் எவ்வளவு அவதிப்படுகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். இச்சந்தையை பல்பொருள் அங்காடியாக மாற்றுவதினால் விலை ஏற்றம் உங்களை பாதிக்கும் என்பதில் அக்கறை கொண்டுள்ளோம்.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி ஷெங் ஷியோங் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோரியுள்ளது. அவர்களின் போக்கு சிறுவியாபாரிகளின் வாழ்கைக்கோ அல்லது குடியிருப்பாளர்களுக்கு பொருட்களின் விலையால் பாதிப்போ நேர்ந்தால் நாங்கள் அதை கண்டிப்பாக எதிர்ப்போம்.
நாங்கள் தொடர்ந்து உங்களுக்காக தோள்கொடுத்து குரல் கொடுப்போம்.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி.
இத்துண்டறிக்கை புக்கிட் பாஞ்சாங் தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.