|
சிங்கப்பூர் ஜனநாயகளாளர்கள்
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் (சி.ஜ.க) இளைஞர் பிரிவு சமீபத்தில் கூடி, நம் நாட்டில் இளைஞர்கள் எதிர்நோக்கும் விறுவிறுப்பான சவால்களை சந்திக்க தனது புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுத்தது.
இளய ஜனநாயகளாளர்களின் சாசனத்தின்படி இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை அதன் மன்றத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கெளரவ செயலாளரை தெரிவு செய்யப்படவேண்டும். இவர்கள் இளைஞர் பிரிவை வழிநடத்தி மேலும் சி.ஜ.க-வின் நோக்கங்களையும் இலட்சியங்களையும் விரிவாக்குவார்கள்.
தலைவரான திரு பிரிவீன் சுராஜ், தனது தேசிய சேவையை சில மாதங்களில் முடிக்கவுள்ளார். ராணுவ கடப்பாட்டை முடித்து சட்டத்துறையில் மேற்படிப்பை தொடரவிருக்கிறார். .திரு பிரிவீன் தொடக்க கல்லூரியில் படிக்கும் பொழுதே சி.ஜ.க.-வில் உறுப்பினரானவர்.
"இளய ஜனநாயகளாளர்களின் தலைவராக செயல்படுவதில் பெருமை அடைகிறேன். நாங்கள் சிங்கப்பூரர்களிடயே ஓர் எழுச்சியான அணி, நம் நாட்டின் சக இளஞர்களை அணுகி அரசியல் நாட்டத்தை ஊக்குவித்து அவர்களை சி.ஜ.க-வுடன் ஈடுபடச்செய்யப் பாடுபடுவோம்," என்றார் திரு பிரிவீன்.
துணைத் தலைவரான திரு ஜுஃப்ரி சாலிம் மூன்று பிள்ளைகளுக்கு இளம் தந்தையாவார். இவர் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே நடந்த "தபோலே தகான்" என்னும் "தாங்க முடியலப்பா" போராட்டத்தில் ஈடுபட்டபோது தனது அசாதாரணமான துணிவையும் அரசியல் முதிர்ச்சியையும் வெளிக்காட்டினார். வேலை நிமித்தத்தின் காரணமாய் தான் குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டு, அபராதத்தை கட்டமுடியாது என்று சொல்லி சிறைக்குச் செல்கிறேன் என்று தன் துணிச்சலைக் காட்டினார்.
.
கெளரவச் செயலாளராக திரு ஜரோட் லூ தேர்ந்து எடுக்கப்பட்டார். இவர் உயிர்நூற்றுறைப் பிரிவு அறிவியலிலும் நுண்ணுயிர் துறையிலும் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தில் பட்டம்பெற்றவர். திரு லூ சென்ற ஆண்டிலிருந்து சி.ஜ.க-வில் ஈடுபாடு கொண்டு இளய ஜனநாயகளாளர்களை ஒருங்கிணைக்க மிகக் கடுமையான உத்வேகத்தை வெளிப்படுத்தியவர்.
இளய ஜனநாயகளாளர்கள் அமைப்பு 2000-ம் ஆண்டில் நான்கு உறுப்பினரோடு தொடங்கப்பட்டது. தொடர்ந்து அதன் வளர்ச்சி சீரோடு மேன்மை அடைந்து இப்பொழுது உத்வேகத்துடன் சி.ஜ.க-வின் அங்கமாக செயல்படுகிறது. அதன் உறுப்பினர்களும் சகாக்களும் தங்களின் திறமைகளையும் ஆற்றலையும் கட்சியின் இணையதளத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.
சி.ஜ.க-வின் இளய ஜனநாயகளாளர்கள் வெளி நாடுகளிலும் உலகலாவிய இளைஞர் அமைபுக்களிலும் அங்கம் வகிக்கின்றனர். சமீபத்தில் குமாரி சுராயா அக்பர் பெண்களுக்கான ஹாங் காங்கில் நடந்த ஒரு பட்டறையில் கலந்துகொண்டார்.
மிகவும் எதிர்பார்ப்புக்களோடு பதவி ஏற்ற இம்மூவரும் வயதில் 20-களில் உள்ளவர்கள். இளய ஜனநாயகளாளர்களின் உறுப்பினர்களை உயர்த்துவதும் தாய் கட்சியின் சீர்திருத்தக் கொள்கைகளை பறை சாற்றி சிங்கப்பூரில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும் முனைந்துள்ளனர்.
இளய ஜனநாயகளாளர்களின் சமீபத்திய கூட்டத்தில் நடைமுறை அரசியல் அமைப்பினால் சமுதாயத்தில் பின்தங்கியவர்களின் நலத்திற்கு பாடுபடுவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தபட்டது. சமூக நிகழ்சிகளின் மூலம் இளய சிங்கப்பூரர்களுடன் தொடர்பு உண்டாக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர்கள் வெளியிட்டனர்.
சிங்கப்பூர் ஜனநாயககட்சியின் பொதுச்செயலாளர் சீ சூன் ஜுஆன் இளம் தலைவர்களுக்கு வாழ்துக் கூறி, அவர்களின் தலைமைத்துவத்தை நிரூபிப்பதற்கான வழி முறைகளை எடுத்துரைத்தார். எல்லா இளய ஜனநாயகளாளர்களையும் அரவணைத்து ஓர் இயக்கத்தை உருவாக்கி சி.ஜ.க-விர்க்கு பெருமை சேர்ப்பதோடுமட்டுமல்லாது சிங்கப்பூர் முழுமைக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என்றார்.
|