|
சிங்கப்பூர் ஜனநாயகளாளர்கள்
விரிவடைந்து நம்பிக்கையுடன் வளர்ந்துவரும் வேளையில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சி.ஜ.க) அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியை வழி நடத்த 14 பேர் கொண்ட மத்திய செயற் குழுவை (ம.செ.கு) தேர்ந்தெடுத்திருக்கிறது.
சமீபத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தங்களின் செயற்பாட்டை சிங்கப்பூரின் மாற்றத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மீண்டும் அர்ப்பணித்தனர்.
கட்சியின் நான்கு முக்கிய பதவியில் மாற்றம் இல்லை. திரு. காந்தி அம்பலம் தொடர்ந்து தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். . திரு பிரான்சிஸ் யோங் தொடர்ந்து துணைத் தலைவரானார்.
டாக்டர் சீ சூன் ஜுவானும், திரு ஜான் டானும் முறையே பொதுச் செயலாளராகவும் துணைப் பொதுச்செயலாளராகவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர்.
பொருளாளர் பதவியில் மாற்றம் ஏற்பட்டு திரு ஜெரால்டு ஷங் அப்பொறுப்பை ஏற்றார். விற்பனைச் சந்தை மேலாளரான திரு ஷங் 2006-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டவர். துணைப் பொருளாளர் திரு ஜெஃப்ரி ஜார்ஜ், இவர் ஒர எண்ணை தளவாடத்துறையின் பொறியாளர் ஆவார்.
மிகவும் உன்னிப்பாகவும் கடுமையாகவும் நடந்த போட்டியின் முடிவில் செயற்குழுவிற்கு ஆறு பேர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்: குமாரி சீ சியோக் சின், குமாரி லில்லியன் சியா, திரு ஜானி ஹோ, திரு. முஹமது இசா, திரு. ஜுஃப்ரி முஹம்மது, திரு சில்வெஸ்டெர் லிம்.
இந்த ஆண்டு இரு புதுமுகங்கள் கட்சித் தலைமைத்துவத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் -- ஜுஃப்ரி முஹம்மதுவும், சில்வெஸ்டெர் லிம்மும். திரு ஜுஃப்ரி கட்சியில் உறுதியானவர். ஒருமுறை காலம்சென்ற திரு ஜே. பி. ஜெயரத்தினம் பாட்டாளிக்கட்சியின் தலைவராய் இருந்தபோது ஜுஃப்ரி "இரவலாக" அங்கு சென்று மீண்டும் சி.ஜ.க-வின் தலைமைத்துவத்திற்குத் திரும்பியிருக்கிறார்.
"இப்போது இருக்கும் சி..ஜ.க-வின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை வைத்ததால் மீண்டும் வந்திருக்கிறேன்" என்று எதிர்கட்சி அனுபவம் நிறைந்த அவர் கூறினார், மேலும் "கட்சி சரியான வழியில் செல்கிறது. உறுப்பினர் வளர்ச்சி இதற்கு எடுத்துக்காட்டு," என்றார் திரு ஜுஃப்ரி.
மற்றுமோர் முதல்முறையாக வந்திருப்பவர் திரு சில்வெஸ்டெர் லிம். அவரின் அமைதியான தோற்றம் ஜனநாயகத்திற்கும் நீதிக்கும் அவரிடம் உள்ள கடும் ஆர்வத்தை மறைத்துக்காட்டும்.
"நாங்கள் எதிர்கொள்ளக்கூடியவற்றை ஆவலோடு சந்திக்க உறுதியுடன் செயல்பட்டு மக்களின் உண்மை நலனுக்கு பாடுபடும் அரசாங்கமாக மாற்றியமைக்க பாடுபடுவோம்," என்றார் திரு லிம்.
எதிர்பார்ப்புடன் மிகுந்த வேலைகளை சந்திக்க இருக்கும் புதிதாக தேர்ந்தெடுக்கபட்டிருக்கும் தலைமைத்துவம் மேலும் இரு உறுப்பினர்களை மத்திய செயற்குழுவில் இடம்பெற எண்ணியுள்ளது. அவர்கள் திரு லாரென்ஸ் லாயும் திரு வாரன் ஈஸ்வரனும். திரு லாய் முன்னய ம.செ.கு. உறுப்பினர். திரு ஈஸ்வரன் ( 25), இளம் ஜனநாயகத்தின் உறுப்பினர். அவரின் தேசிய சேவை நாட்களிலிருந்து கட்சியில் இருப்பவர்.
"வாரனின் ம.செ.கு. சேர்க்கை சிங்கப்பூர் இளைஞர்களிடயே எங்களைப்பற்றிய வளர்ந்துவரும் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது," என்று தலைவர் காந்தி அம்பலம் குறுப்பிட்டு மேலும்கூறினார். "இளம் ஜனநாயகத்தின் உறுப்பினர்கள் கட்சியின் போக்கிலும் வளர்சியிலும் அவர்களின் உற்சாகமான ஈடுபாட்டை உறுதி செய்கிறது."
இப்புதிய மத்திய செயற்குழு தன்னுடய திடமான, தொடர்ந்து உறுப்பினர் சேர்ப்பிலும் சிங்கப்பூரர்களிடயே தங்களின் கருத்து சென்றடையும் திறனையும் பெற்றுள்ளோம். என்று உறுதி பூண்டனர். தொடர்ந்து இணையத்தின் வழி சிங்கப்பூரர்களிடம் சுதந்திரமான, நியாயமானதோர் நாட்டை உருவாக்க அவர்கள் முன்வரவேண்டிய முக்கியத்துவத்தை புதிய தலைமைத்துவம் வலியுறுத்தும்.
நிழற்படம்:
(நிற்பவர்கள்: இடமிருந்து வலம்) சில்வெஸ்டெர் லிம், ஜுஃப்ரி முஹம்மது, சீ சியோக் சின், லில்லியன் சியா, ஜானி ஹோ, ஜெரால்டு ஷங்
(முன் வரிசை: இடமிருந்து வலம்) சீ சூன் ஜுவான், பிரான்சிஸ் யோங், ஜெஃப்ரி ஜார்ஜ், காந்தி அம்பலம், ஜான் டான், முஹமது இசா
|