Singapore Democrats

Home News தமிழ் (Tamil language) லீ குவான் யூவின் காலடியில் ஒரு நாடு
லீ குவான் யூவின் காலடியில் ஒரு நாடு Print Email
Sunday, 19 July 2009

சிங்கப்பூர் ஜனநாயகளாளர்கள்

மக்கள் செயல் கட்சியின் (ம.செ.க.) அராஜக போக்கு உள்நாட்டில் மட்டும் அல்லாது. வெளியேயும் தன் கொடூரப் போக்கை காண்பிக்கத் தொடங்கிவிட்டதா?

இதுவரை அதன் கோரப்பிடியிலிருந்து சுதந்திரமாக இயங்கிய இணையதலத்திலும் தன் கைவரிசையை காட்டுகிறதோ என்ற ஒர் அச்சத்தை ம.செ.க. உருவாக்கிவிட்டது.

சமீபத்தில் இணையதளத்தில் எல்லோரும் பார்கும்படியாக இருந்த "லீ குவான் யூவின் காலடியில் ஒரு நாடு" என்னும் தகவல் படம் தடை செய்யப்பட்டிருக்கிறது.

இந்த 45-நிமிட படம் 'யூ-ட்யூப்' மூலம் இணையத்தின் வழியாக 50,000 பார்வையாளர்களை சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஈர்த்தது. ஆனால், இவ்வாண்டு ஜூலை மாதத்திலிருந்து அந்தப் படத்தின் இணையத்தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

யூ-ட்யூப் நிர்வாகத்திடமிருந்து "இப்படம் வெளியீட்டு உரிமையை மீறியதால் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது" என்ற சிறிய பதிலே.

சீலன் பாலேஇந்த உரிமை மீறல் எப்படி உருவாகி இருக்க முடியும்? அப்படத்தை தயாரித்து வெளியிட்டவர் சிங்கப்பூர் வாசியான திரு சீலன் பாலே அவர்கள். எங்களுக்கு தெரிந்தவரை அந்த படம் யூ-ட்யூப்பில் இலவசமாக மக்களிடத்தில் சென்றடைவதில் அவருக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.

இச்சூழ்நிலையில், ஏன் அந்த படம் இப்போது யூ-ட்யூப்பில் "தடைக்கு" உட்படுத்தப்பட்டிருக்கிறது? ஒரு வேளை அதில் கண்டிருக்கும் தகவலும், படக்காட்சிகளும் எவரையேனும் உறுத்தியதோ?

கலை ஆர்வமுள்ள திரு பாலே அவர்கள், அந்த படத்தில் லீ குவான் யூ எப்படி தன் அராஜக ஆட்சியை வழிநடத்தி செல்கிறார் என்று விவரிக்கிறார்.

1959-ம் ஆண்டிலிருந்து எப்படி திரு லீ பதவிக்கு வந்தார், வந்தபின் அவரின் போக்கு எப்படி மாறியது, ம.செ.க.-வின் தொடர்ந்த ஆட்சியை எப்படி வேரூன்றச்செய்தது என்பதை தயாரிப்பாளர் சித்தரிக்கிறார்.

இதுவரை பார்திராத படத்தொகுப்புகளின் உதவியோடு திரு லீ தன் முன்னாள் அரசியல் சகாக்களை எப்படி களை எடுத்தார், நாட்டின் ஊடகங்களை எப்படி மடியவைத்தார் என்பன போன்ற சரித்திரப் பூர்வமான நிகழ்வுகளை தயாரிப்பாளர் நமக்கு எளிய முறையில் தந்திருக்கிறார். இப்படம் யாருமே செய்யாத ஒரு புதிய முயற்சி.

இந்த படத்தை தனிப்பட்ட முறையில் அழைப்பினர்களிடையே சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு விடுதியில் காண்பிக்கப்பட்டது. பார்வையாளர்களை அச்சுருத்தும் தன்மையில் காவல்துறையினரும், அரசாங்க அதிகாரிகளும் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே அத்து மீறி நுழைந்து ஒளிவட்டை பறிமுதல் செய்துவிட்டுச் சென்றனர்.

ஆனால், ஓர் ஆண்டுகளுக்குமேல், இவ்வாண்டு ஜூலை மாதத்தில் திரு சீலன் பாலே அவர்கள் அந்த "லீ குவான் யூவின் காலடியில் ஒரு நாடு" என்ற படத்தின் தொடர்பாக காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்.

"காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைப்போல், ஆச்சரியத்திற்குரிய நிகழ்வு என்னவென்றால், திரு பாலே அவர்களின், காவல்துறையினரின் விசாரணையைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள், யூ-ட்யூப்பின் "தடை" அமுலாக்கப்பட்டிருக்கிறது. இதை என்னவென்று சொல்வது?

இருந்தாலும் இந்த "லீ குவான் யூவின் காலடியில் ஒரு நாடு" என்ற தகவல் படத்தை பார்க்க விரும்புபவர்களுக்கு மாற்றுவழி உளது.

அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் http://one-nation-under-lee.org/-என்ற இணையத்திற்கு சென்று இப்படத்தை 5 பகுதிகளாகப் பார்க்கலாம், அல்லது Google-வழியாகவும் காணமுடியும். ம.செ.க.-வின் அராஜகக்கரங்கள் இன்னும் இணையத்தை தன் கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டுவர முடியவில்லை என்பதை இது காட்டுகிறது.

ஆனால் இச்சுதந்திரம் நீடிக்குமா?

Share this article:
Facebook Technorati Stumble It! Newsvine Reddit Del.icio.us Digg This!
Comments (0)
Please login or register to post your comments.
 

Act Now

Support Democracy!
Please Donate
Read:The party that stands up for you
More options to donate
 

SDP Publictaions

Magazine Support SDP , buy our 30th Anniversary Magazine here

minsal
pdf
link

 

Danny the Democracy Bear

Now available online here!

 
Singapore Democrats on Facebook
Banner
Banner

Awesome Words

The ultimate measure of a man is not where he stands in moments of comfort, but where he stands at times of challenge and controversy.

Martin Luther King, Jr
Banner

News feeds

Singapore Democrat News
Joomla Templates by JoomlaShack