|
Sunday, 28 June 2009 |
|
சிங்கப்பூர் ஜனநாயகளாளர்கள்
சென்ற ஆண்டில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் மலேசியாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கும் என்ன ஒற்றுமை? சிங்கப்பூருக்கு இதன் மூலம் என்ன படிப்பினை?
ஒன்று, வெகுதூரத்திலுள்ள அமெரிக்காவில் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது மற்றொன்று பக்கத்து நாட்டில் நடக்கும் பரபரப்பில்லா காரியம். ஆனால் இவையிரண்டும் எளிதில் ஏற்றுக்கொள்ளும் இயல்புடைய சிங்கப்பூரர்களிடம் ஆழ்ந்த மனமாற்றத்தை விளைவித்தது என்றால் மிகையாகாது.
எது நடைபெறாது என்று எண்ணியது அமெரிக்காவில் நடந்தேறியது. அந்நாட்டின் சரித்திரத்தில் முதன் முறையாக ஒரு ஆப்ரோ-அமெரிக்கர் நாட்டின் ஆக உயர்ந்த பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டார். இது உண்மையிலேயே ஒரு முக்கியமான சாதனை. குறிப்பாக 1960-களில்தான் சமுதாய உரிமை இயக்கம் அமெரிக்காவில் உருவெடுத்து சில வெள்ளை இனப் பிரிவுகளின் பயங்கரமான எதிர்பை எதிர்கொண்டது.
இதற்கு முன் மலேசியாவில் ஓர் அரசியல் சுனாமி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் நன்கு வலுவான நிலையில் இருந்த இன அரசியலின் அதிகாரவர்க்கத்தை ஒதுக்கித்தள்ளியது. அங்கு தேர்தல் அந்நாட்டின் அரசியலில் ஒரு புதிய சரித்திர சகாப்தத்திற்கு வழிகாட்டியானது.
சிங்கப்பூரில் நாம் இந்த இரண்டு சம்பவங்களிலிருந்து பிரிந்திருக்கமுடியுமா? கண்டிப்பாக ம.செ.க தலைமைத்துவம் அதன் நன்கு கட்டுப்படுத்தப்பட்ட பிரசார சாதனத்தின் மூலம் அவ்வித மாற்றங்களை இங்கு தடுக்கும்.
மக்களின் அடிப்படை உணர்வுக்கு மாறாக எதேச்சாதிகார ஆளும் வர்க்கம் தொடர்ந்து தன் பழைய பஞ்சாங்கத்தை புரட்டுகிறது . தன் பிதற்றலின்படி சிங்கப்பூரர்கள் இப்போதுள்ள நிலைமையை விட்டு மாற்றத்தை எதிர்கொள்ள தயாராய் இல்லை என்பதே. ஆனால் இதுவா ஒரு சராசரி சிங்கப்பூரரின் உண்மையான பிரதிபலிப்பு?
சென்ற 2007-ம் ஆண்டு எஸ். ராஜரத்தினம் சர்வதேச ஆராய்சிப் பள்ளி எல்லா இனத்தைச் சேர்ந்த 2,000 சிங்கபூரர்களிடம் ஓர் ஆய்வு நடத்தியது. அதில் பங்கெடுத்தவர்களில் 91 விழுக்காட்டினர் சீனர் அல்லாத இனத்தவரை பிரதமராக ஏற்றுக்கொள்ள தாங்கள் தயார் என்றனர்.
மலேசியாவில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாறுதல் இனவாத சர்ச்சையில் இருந்து விலகி எழும் கேள்வி: அரசியல் வாதிகள் யாருக்காக சேவை ஆற்றுகிறார்கள்? தேர்தல் முடிவின்படி தெள்ளத்தெளிவாகத் தெரியும் உண்மை என்னவென்றால் மலேசியர்கள் அரசியல்வாதிகளிடமிருந்து கேட்பதெல்லாம் உயர்ந்த, தரமான சேவை. இனவாத வெற்றுப் பசப்புரையை ஆளும் வர்க்கத்தினரிடமிருந்து 'வாங்க' மறுத்ததே. மலேசியர்கள் கேட்பதெல்லாம்: நேர்மை அரசு, இன அரசியல் அல்ல.
அதே மனோநிலையில் உள்ள சிங்கப்பூரர்களும் ம.செ.க-வின் தேய்ந்துபோன, அதாவது மக்கள் இன அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் ஆதலால் குழுப் பிரதிநிதித்துவ தொகுதி (கு.பி.தொ) முறை தேவை என்ற கூற்றை ஏற்கவில்லை.
1981-ல் தானே காலம்சென்ற திரு ஜே.பி. ஜெயரத்தினம் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆன்சன் தொகுதியில் எதிர்த்துநின்ற 'பெரும்பான்மை' சமூகத்தை சேர்ந்தவரை தோற்கடித்து வெற்றி பெற்றார்? தொடர்ந்து நடந்த 1984-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் திரு ஜெயரத்தினம் மீண்டும் ஒரு சீன வேட்பாளரை அதேதொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், அப்போதய பிரதமர் லீ குவான் யூ தம்கட்சி வேட்பாளர் ஒரு மந்திரி பதவிக்கு தகுதி உள்ளவர் என்று தனது தனிப்பட்ட உறுதிகொடுத்தது.
இந்த குழுப் பிரதிநிதித்துவ தொகுதி முறை ம.செ.க-வால் கற்பனை செய்யப்பட்டு 1988-ன் பொதுதேர்தலிலிருந்து நடைமுறைபடுத்தப்பட்டது. இத்திட்டம் நாடாளுமன்றத்தில் 'சிறுபான்மை' பிரதிநிதித்துவத்தை பேணுவதர்க்கே என்ற சப்பைக்கட்டு சுத்தமான கட்டுக்கதையே. நடுநிலை அரசியல் ஆய்வாளர்களுக்கு கு.பி.தொ. முறை ம.செ.க.-வால் தன் ஆதிக்கப்பிடியை அழியாமல் நிலை நிறுத்துவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் என்பதே.
சமீபத்தில், தொடர்ந்து இனவாத கட்டுக்கதையை பரப்பும் நோக்கோடு அதன் மூலம் மக்களை அச்சுருத்தும் செயலாக நம் அரசு ஊடகங்கள் மலேசியாவின் திருப்புமுனையாக அமைந்த சமீபத்திய தேர்தலுக்குப்பின் அந்நாட்டில் இன பதற்றம் அதிகமாகியிருக்கிறது என்ற பிரச்சாரமே. ஒருவேளை சிங்கப்பூரின் எதேச்சாதிகாரிகள் பயப்படுவது எல்லாம் மலேசியாவில் இனிமேல் இன பயத்தை ஒரு கருவியாக தேர்தலில் பயன் படுத்தமுடியாதே என்பது.
அதோடு, சிங்கப்பூர் அரசு இப்போது பயப்படுவதெல்லாம் மலேசியாவில் ஏற்பட்ட மாற்றம் இங்கு தொற்றி பரவிவிடுமோ என்பதே.
இப்போது சிங்கப்பூரர்களுக்கு தேவை புதிய தன்னம்பிக்கை, ஆளும் வர்க்கத்தின் பய உனர்வுப் பிரச்சாரத்தை வெற்றிகொள்வது.
மலேசியாவின் எதிர்கட்சிக் கூட்டனியின் இனவாதம் அற்ற அரசியலை ம.செ.க. நிராகரிக்கும் அளவுக்கு சென்று, "அம்னோ புத்திராக்கள்" என்று கூறப்படும் தோழமை சலுகைப் போக்கை ஆதரிக்கிறது. மலேசியாவில் ஜனநாயகத்தை நோக்கி செல்லும் உண்மை நிலவரம் சிங்கப்பூர் அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, மலேசியாவில் ஏற்பட்ட இந்த புதிய எழுச்சி அதன் நிம்மதிக்கு உகந்ததல்ல.
இதன் காரணமாக இனவாத கட்டுக்கதை சிங்கப்பூரில் தொடர்ந்து பய உணர்வை ஊட்ட கையாளப்படுகிறது. பிரதமர் லீ சியன் லூங் சமீபத்தில் மீண்டும் 'வாந்தியெடுத்தது' என்னவென்றால் சிங்கப்பூரர்கள் சீனர் அல்லாத ஒரு பிரதமரை ஏற்றுக்கொள்ள இப்போதைக்கு தயாராக இல்லை என்ற கூற்று. இது ஒன்றும் புதிதல்ல. அவரின் தந்தை மூத்த லீ 1988-ல் திரு எஸ். தனபாலன் கோ சொக் தோங்கை விட புத்திசாலி என்றாலும் அவரை பிரதமர் பதவிக்கு நிராகரித்ததை எதிரொலித்தது.
ஆனால் அமெரிக்காவிலோ திரு பாராக் ஒபாமா மாற்றம் என்னும் காற்றின் வேகத்தில் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க மக்கள் தங்களின் அதிபர் யார், கருப்போ வெள்ளையோ, என்னும் முடிவு செய்வது அவர்களின் கையில். திரு ஒபாமாவின், மாற்றம் தேவை என்னும் எதிர்பார்ப்பு பெரும் பான்மையான சிங்கப்பூரர்களிடயேயும் பொருந்தி ஒலித்தது. ஆனால், அந்தோ பரிதாபம், சிங்கப்பூரில் யார் தலைவர்கள் என்ற கடைசி முடிவு பிரதமரின் கையில்.
திருவாளர்கள் 'லீ'-க்களின் கருத்தில்லாத பேச்சின் மூலம் ம.செ.க.-தான் ஒரு சீனர் அல்லாத பிரதமரை ஏற்கமறுக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகிறது அல்லவா?
ஆனல் .ம.செ.க. தொடர்ந்து வீசும் மாற்றம் தேவை என்னும் அலையை, மலேசியாவில் இருந்து மற்றுமல்ல துரநாடான அமெரிக்காவிலிருந்தும் நம் கடர்கரைக்கு வருவதை தடுத்து நிருத்தமுடியுமோ?
|
|
Danny the Democracy Bear
|
|
|
 Now available online here! |
|
Awesome Words
“I disapprove of what you say, but I will defend to the death your right to say it.” Voltaire
News feeds
|