|
சிங்கப்பூர் ஜனநாயகளாளர்கள்
பல லட்சக்கணக்கில் சம்பளம் பெரும் நம் மந்திரிசபையின் சமீபத்திய "யுத்தக் குரல்": "திறத்தை மாற்றியமைத்தல், திறத்தை உயர்த்திக்கொள்ளுதல், பல திறன்களை வளர்த்துக்கொள்ளுதல்."
இது நீண்ட வருடங்களாக அவர்கள் நம் தொழிலாளர்களிடம், புதிய பொருளாதாரத்திற்கு தங்களை "உயர்த்தியும், தயார் நிலையிலும் வைத்துக் கொள்ள வேண்டும்" என்று பிதற்றும் தேய்ந்து போன பழய பல்லவியே.
புதிய பொருளாதாரமா? பழைய பொருளாதாரத்திலிருந்தே நாம் வெளி வரவில்லையே! தொடர்ந்து இன்னும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு "சுவர்கலோக" வரிச் சலுகைகளை வாரியளித்து அவர்களின் முதலீட்டை மேலும் இங்கு ஈர்க்க முடியும் என்ற எண்ணத்தில் தானே செயல்பாடுகள் நிலவுகின்றன.
எப்போது நாம் வேறு மாற்றுத் தொழில் துறைகளுக்கு முயற்சித்தோமோ, அவையாவும் மர்மமாக செயல்படும் வரியேமாற்று, பணச்சலவை செய்யும் நபர்களின் பணத்திற்காக மற்ற இடங்களோடு போட்டி போட வேண்டியதாயிற்று. இதற்காக நாம் நமது வங்கிச் சட்டங்களை அழித்தெழுதி, கேள்விக்குரிய வாடிக்கையாளர்களின் சந்தேகம் நிறைந்த நடவடிக்கைகளை அங்கீகரித்து, சூதாட்டக் கூடங்களை உருவாக்கியுள்ளோம்.
ஆனால் இந்தப் "புதிய பொருளாதார" மாற்றமைப்பே, இன்று ஆசியாவிலேயே முதல் நாடாக சிங்கப்பூரை மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு தள்ளியுள்ளது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து நம் நாட்டின் பொருளாதாரம் கட்டுக்கடங்காத வீழ்ச்சிக்கு ஆளாகி, 1960களில் இருந்து சிங்கப்பூர் கண்டிராத மிக மோசமான பொருளாதார நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதை விட கேவளமான நிலை என்னவென்றால், எந்த ஒரு சந்தர்பத்தையும் நழுவவிடாது, தாங்கள் எவ்வளவு அனுபவமும் திறமையும் கொண்டவர்கள் என்று தம்பட்டம் அடிக்கும் நம் மந்திரிகளே, இந்தப் படுகுழியிலிருந்து எப்படி மீண்டு வருவது என்று தெளிவாகத் தெரியவில்லை என ஒப்புக்கொண்டதே ஆகும்.
பிரதம மந்திரி லீ சியன் லூங் கூறுவதெல்லாம் ''நாம் பொருத்திருப்போம், அமெரிக்கப் பொருளாதாரம் மீட்படையும் பொழுது நமக்கும் ஒரு விடிவு காலம் வரும்'' என்பதே.
புதிய பொருளாதாரமா? அரசாங்கம் யாரை ஏமாற்ற பார்க்கின்றது?
நாம் தொடர்ந்து ஒரு சேவை நிலையமாக, பன்னாட்டவர்களுக்கு ஒரு வசீகரமான இடமாகத்தானே இயங்கி வருகிறோம்.
முந்திய காலத்திற்கும் இன்றைய நிலைக்கும் என்ன வித்தியாசம் என்றால், ஆசியாவின் மலிவான பொருளாதாரங்களோடு போட்டி போடும் நிலைப்பாடு.
விளைவு: நம்பிக்கையற்ற நடவடிக்கையாக, அந்நிய தொழிலாளர்களை திரளாக குவித்து செலவினத்தை குறைப்பதின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களைத் தக்க வைப்பது.
இச்சூழ்நிலையில், திறத்தை மாற்றியமைப்பது, பல திறன்களை வளர்த்துக்கொள்வதென்பதெல்லாம் என்ன?
இவையாவும், அரசாங்கத்தால் பேசப்படும் வார்த்தை ஜாளங்களே. இப்போதய பொருளாதர சிக்கலிலிருந்து மீண்டு வர பல நடவடிக்கைகளை நம் அரசாங்கம் கையாண்டு வருகிறது என்ற ஒரு மாயத் தோற்றமே.
இங்கே அரசாங்கம் விரிவாகக் கூறாதது என்னவென்றால்: அமேரிக்க பொருளாதாரம் அபிவிருத்தி அடையவில்லையென்றால், இந்த திறன்கள் யாவையும் பெற்று என்ன பயன்?
இத்திறன்களை வளர்க்கும் பயிற்சியில் அரசாங்கம் எப்படி உண்மையாக இருக்க முடியும்? இவ்வளவு திறன்களோடு குறைந்த ஊதியம் பெறும் ஒரு வெளிநாட்டு ஊழியருடன், குறைந்த வருவாய் தரும் வேலைக்கு போட்டி போடுவதா? இது நம்முடைய வளர்ச்சியைக்காட்டுகிறதா?
மேலும், ஏன் இந்த "பல திறன்" என்ற சொல்? ஓன்றுக்கு மேல் மற்றொன்று வேலை செய்து வயிற்றைக் கழுவும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் தொழிலாளர்களிடயே இக் கசப்பான உண்மையை நாசூக்காகக் கூறும் சொல் தானே இது?
நம் நாட்டின் பொருளாதார மாதிரியை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம். குறைந்தது இந்தமாற்றம் நம் தொழிலாள்ர்களுக்கு நாட்டின் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப அவர்களுக்குச் சம்பளம் அளிக்க வகை செய்து அவர்களை சுரண்டலிலிருந்து விடுவிப்பது.
அரசாங்கம், நிர்வாகம், தொழிலாளர் "முத்தரப்பு" ஒற்றுமை என்பதெல்லாம் வெறும் தந்திரம். இம்மூவரிடையே வாழ்வுத் திறமுடைய உறவு என்பது இல்லை. கொள்ளையடிக்கும் தன்மையே, அதாவது ஆட்சி செய்யும் கட்சியும் தொழில் நிர்வாகமும் ஒன்று சேர்ந்து பாட்டாளிகளை தொடர்ந்து இல்லாமை நிலைக்கு தள்ளுவதே.
இந்த ஐம்பது ஆண்டு ஏற்பாட்டு முறையை எப்படி விளக்குவது? தொழிலாளர்களின் சம்பளம் சரிந்துகொண்டேயிருக்கும் வேளையில் அவர்களின் வாழ்கைச் செலவுகள் அதிவேகத்தில் அதிகரித்த நிலையில் வீட்டிற்கு கொண்டு செல்லும் ஊதியம் அவர்களுக்கு எப்படி கட்டுபடியாகும்?
மத்திய சேமநிதி எதற்கும் தொடர்பே இல்லாத வட்டித் தொகையை கொடுத்து, ஒய்வுற்றோரின் சேமிப்பை கொடாமல் வைத்துக்கொண்டிருக்கும் வேளையில் தேசிய தொழிற்சங்க சம்மேளனம் எதையும் பார்காது, எதையும் பேசாது, எதையும் செய்யாதிருக்கிறது. ஆனால் இதுகூட சரியன கூற்றல்ல. அது அரசாங்க நடவடிக்கைகளுக்கு உற்சாகமூட்டும ஆரவாரத் தோடு தோள்கொடுத்து நிற்கிறது என்பதுதான் உண்மை.
இந்த மிகவும் சிரமமான நேரத்தில், பல ஆண்டுகளாக .ம.செ.கா-வின் வேண்டுமென்றே செயல்படுத்தப்பட்ட தொழிலாளர் எதிர்ப்பு கொள்கைக்கும் சட்டங்களுக்கும் உட்படுத்தப்பட்டு, அவர்களின் அடிப்படை உரிமையான தொழிற்சங்கம் நிறுவுவதற்குக்கூட மறுக்கப்பட்டு நம் தொழிலாளர்கள் வருத்தத்திற்கும் மனச்சோர்விர்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
ம.செ.க-தலைவர்கள், தொழிலாளர்களின் தலைவர்கள் நாங்கள் என்ற போர்வையில் உலா வருபவர்கள் உட்பட, தொழிலாளர்களின் அவாவிற்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் கட்டுப்பாடிட்டு சீரழிப்பதை நிறுத்த வேண்டும்.
ம.செ.க-வின் பிடியில் இருந்து விடுபட்ட ஒரு உண்மையான தொழிலாளர் கூட்டணி இல்லாதவரை நம் நாட்டு தொழிலாளர்கள் சோர்வடைந்து, உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் தான் இருப்பர். இவ்வாண்டின் தொழிலாளர் தினத்தை நாம் தாண்டிவந்திருக்கிறோம், ஆனால் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி நம் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் தேவைகளுக்காகவும் தொடர்ந்து போராடும். நம் தொழிலாளர்களுக்கான கீழ்கண்ட உரிமைக்காக நாம் தொடர்ந்து போராடுவோம்:
- சிங்கப்பூரர்களுக்கு முதன்மை
- குறைந்தபட்ச ஊதியம்
- வேலைநீக்க சலுகைகள்
''திறத்தை மாற்றியமைப்பது, திறத்தை உயர்த்துவது, பல திறன்களை வளர்த்துக்கொள்வது'' போன்ற வீண் பேச்சுப் போதும். நம்மைச் சமாதானப் படுத்துவதற்காகப் பயன்படுத்தபடும் வெறும் சொல் துணுக்குகள் இவை, உண்மையான பொருளாதார பிரச்சினையிலிருந்து தொழிலாளர்களின் கவனத்தை திசைதிருபும்முயற்சியே. இதையெல்லாம் விட்டு விட்டு உண்மையான பிரச்சினைகளுக்கு கவனம் தேவை: குறைந்த ஊதியத்திற்கு மிகுந்த அளவில் கொண்டு வரப்படும் வெளிநாட்டு ஊழியர் கொள்கை உள்நாட்டு தொழிலாளார்களின் சம்பளத்தை நசுக்குவதோடு நம் தொழிலாளார்கள் யாவருக்கும் மிகுந்த துன்பத்தை கொண்டு வந்திருக்கிறது.
|