Singapore Democrats

Home News தமிழ் (Tamil language) சிங்கப்பூர் ஜனனாயக கட்சியின் தொழிலாளர் தின அறிக்கை
சிங்கப்பூர் ஜனனாயக கட்சியின் தொழிலாளர் தின அறிக்கை Print Email
Thursday, 30 April 2009

நம் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான நேரம்

மதியுரையமைச்சர் திரு லீ குவான் யூ கூறியதைப் போல், கடந்த பத்தாண்டுகள் நம் தொழிலாளர்களுக்கு 'பொற்காலமாக' அமையவில்லை. மாறாக, அவர்களின் நிலை முன்னேராமலே உள்ளது.

சொல்லப்போனால், கணக்கெடுப்புகளின் படி,தொழிலாளர்களின் நிலைமை, குறிப்பாக குறைந்த வருமானம் பெரும் தொழிலாளர்களின் ஊதியம் மேலும் குறைந்தேயுள்ளது. 1998 முதல் 2003 வரையிலான காலக்கட்டங்களில், ஆக குறைந்த வருமானம் பெற்ற 20 விழுக்காட்டினரின் வருமானம் 15 சதவிகிதம் குறைந்தது. மாறாக, ஆக அதிக வருமானம் பெரும் 20 விழுக்காட்டினரின் வருமானம் 11.7 சதவிகிதம் உயர்ந்தது. அதே காலக்கட்டங்களில், ஆக குறைந்த வருமானம் பெறும் 40 சதவிகித மக்களின் செலவுகள் கூடியபோதிலும், வருமானம் குறைந்தே இருந்தது. இந்த நிலமையினால் நம் நாட்டின் வருமான வேற்றுமை மூன்றாம் உலக நாடுகளுக்கு சமமாகவுள்ளது.

இந்த நிலைக்கு ஒரு காரணம் மக்கள் செயல் கட்சி அரசாங்கம் தொடர்ந்து குறைந்த ஊதியம் பெரும் வெளிநாட்டு தொழிலாளர்களை இங்கு வேலையில் அமர்த்தி சம்பளத்தை மட்டுப்படுத்தி நம் பொருளாதாரம் வருவாய் ஈட்டிக்கொண்டு இருப்பதாக காட்டிக் கொள்வதனால் ஏற்பட்டது. பொருளாதாரம் வளர்வதற்க்கு சில பல வழிகள் இருக்கத்தான் செய்கின்றன!

ஒன்று நமது புத்தாக்கமுடைய அறிவுமிக்க ஆள் பலம், உற்பத்தித் திறனுடன் சிறந்த சேவை வழங்குவதில் உள்ளது. மற்றொன்று சம்பளத்தை மட்டுப்படுத்தி லாப ஈவுகள் உயர்வதாக காட்டுவது.

நமக்கு சொல்லாமலே தெரியும் இரண்டாவது பொருளாதார வளர்ச்சி முறை. பொருளியல் நன்றாக இயங்கிய காலக்கட்டங்களிலும், தொழிலாளர் வர்க்கம் அதனால் நன்மை அடையும் முன்னதாகவே, தற்போதைய பொருளியல் மந்தனிலை அவர்களின் வாழ் நிலையை மேலும் மோசமாக்கிவிட்டது.

நிலமை நன்றாக இருந்த காலங்களில் தொழிளாலர்கள் அதன் முழுப்பயனை அடையவில்லை. மேலும், தற்போதைய சூழ்நிலையினால் அவர்கள் வேலை நீக்கம், ஊதியக் குறைப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். நம் தொழிலாளர்களின் நிலை அவர்களை எந்த விதமான காலங்களிலும் நன்மையடையாத படியே வைத்துள்ளது.

தொழிலாளர் தினமான இன்று, சிங்கப்பூர் ஜனனாயகக் கட்சி மீண்டும் அராசாங்கத்தை அதன் சுரண்டல் முறைகளை விட்டு விட வலியுறுத்துகிறது. தொழிலாளர்கள் தங்களுக்கான சுய அமைப்புகளை அமைத்துக்கொள்ளும் உரிமையை அவர்களுக்கு திருப்பிக்கொடுக்க வேண்டுமென வழியுறுத்துகிறது.

தேசிய தொழிர்சங்க காங்கிரஸ், ம.செ.க. அரசாங்கம் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள பயன்படும் ஒரு கருவியாக செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் நலன் கறுதிய சேவைகளை அது ஆற்றவில்லை. நமது கட்சி மீண்டும் ஒருமுறை நம் தொழிலாளர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபெற, அவர்களுக்கென, சுயமான, தனித்த ஓர் அமைப்பு வேண்டுமென வழியுறுத்துகின்றது. அவ்வாறு அமையும் ஒரு சங்கம், நாம் உலக அரங்கில், ஏற்றுமதியையே நம்பி இயங்காத பொருளாதாரமாக நாம் இயங்குவதற்கு வழிவகுக்கும்.

நம் தொழிலாளர்களின் உடனடிப் பிரச்சனைகளை கையாண்டிட நம் கோரிக்கைகளை மீண்டும் ஒருமுறை முன் வைக்கின்றொம் :

1) சிங்கப்பூரர்களுக்கு முதன்மை: வேலை நீக்கம் நேர வேண்டுமாயின், முதலில் வெளினாட்டு ஊளியர்களையே வேலைநீக்கம் செய்வது; சிங்கப்பூரர்கள் இறுதியாக வேறு வழியின்றியே வேலை நீக்கம் அடைய வேண்டும். மேலும் இதுபோன்ற ஒரு திட்டம் சிங்கப்பூரர்கள் ஒரு வேலைக்கு தகுதி இல்லாத போதே வெளினாட்டவர் அந்த வேலைக்கு தகுதி பெறுவார். இது தகுதியுள்ள வெளினாட்டவர் மட்டுமே அந்த வேலையில் அமர்வதை பார்த்துக்கொள்ளும்.

2) அடிப்படை ஊதியம்: சிங்கப்பூரின் பொருட்செலவிற்கேற்ப தொழிலாலர்களுக்கு அடிப்படை ஊதியம் கொடுக்கப்படவேண்டும்.

3) வேலை நீக்க சலுகைகள்:
இச்சலுகைகளின் படி ஊழியர்களுக்கு, வேலை நீக்கத்திற்குப் பின்பு, ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு ஊதியம் வழங்கியாக வேண்டும். இப்படியான ஒரு திட்டம் அவர்கள் வேலை நீக்கம் அடைய நேர்ந்தால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு வலையாக அமையும்.

நம் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் ஜனனாயகக் கட்சியின் மே தின வாழ்த்துக்கள்.

Share this article:
Facebook Technorati Stumble It! Newsvine Reddit Del.icio.us Digg This!
Comments (0)
Please login or register to post your comments.
 

Latest Videos

SDP's Chinese New Year walkabout 2012
You need a Flash Player enabled browser to view this YouTube video
youtube link

Share this article:
Facebook Technorati Stumble It! Newsvine Reddit Del.icio.us Digg This!
 

SDP Publictaions

Magazine Support SDP , buy our 30th Anniversary Magazine here

minsal
pdf
link

 

Act Now

Support Democracy!
Please Donate
Read:The party that stands up for you
More options to donate
 

Danny the Democracy Bear

Now available online here!

 
Singapore Democrats on Facebook
Banner
Banner

Awesome Words

What was everybody's business in the end proved to be nobody's business. Each one looked to the other to take the lead, and the aggressors got away with it.

Jan Christian Smuts
Banner

News feeds

Singapore Democrat News
Joomla Templates by JoomlaShack