|
Tuesday, 28 April 2009 |
|
சிங்கப்பூர் ஐனநாயகளாளர்கள்
கடந்த சில ஆண்டுகளாகஸ் சிங்க்கப்பூர் ஜனநாயக கட்சியான நம்மைப் பற்றியும் நாங்கள் கொண்டிருக்கும் இலக்குகளைப் பற்றியும் பற்பல கருத்துக்கள் எழுந்துள்ளன. அவற்றுள் சில உண்மையாகவும் வேறு சில முற்றிலும் தவறான கருத்துக்களாகவும் உள்ளன.
இவ்வேளையில் எங்கள் மீது செலுத்தப்பட்டிருக்கும் தவறான கருத்துக்களைச் சிங்கப்பூரர்களுக்குத் தெளிவு படுத்தி காட்ட கீழ் காணும் விவரங்களைத் தர விரும்புகின்றோம்.
தவறான கருத்துக்கள்:
1) சிங்க்கப்பூர் ஜனநாயக கட்சிக்குத் தேர்தல்களில் ஈடுபட ஆர்வம் இல்லை.
ஒரு நாடு ஜனநாயகத்துடன் சரியாகச் செயல்படுவதற்குக் கண்டிப்பாகத் தேர்தல்கள் தான் அடித்தளமாக அமைகின்றன என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆதலால் தான் நாங்கள் இதுவரை இடம்பெற்று வந்திருக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் கலந்துகொண்டிருக்கின்றோம். பிற்காலத்தில் நடைபெறும் தேர்தல்களிலும் கண்டிப்பாகக் கலந்துகொள்வோம்.
ஆனால் இன்றுள்ள அரசியல் ரீதியில், எதிர்கட்சியினர் தேர்தல்களில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்துவிடக் கூடாது என்பதே எங்களின் கருத்தாகும். ஏனென்றால் சிங்கப்பூரிலுள்ள அரசியல் நியாயமானதாகவும் சுதந்திரமானதாகவும் இல்லை. பிஎபி தங்களின் தேவைக்கேற்ப அரசியல் விதிகளை மாற்றி அமைகின்றது. ஊடகங்களைத் தங்களின் கைகளுக்குள் போட்டுக் கொண்டு எதிர்கட்சியினரைச் சட்டதிற்கு எதிரானவர்களென்றும் முத்திரையிட்டு, நம் நாட்டின் அரசியலை ஆட்டிப்படைக்கின்றது. இவ்வுலகில் வேறெங்காவது ஒரு நாட்டின் பிரதம மந்திரி ''எதிர்கட்சியினரை எப்படி முடக்க வேண்டு'' என்றும் ''வாக்குகளை மக்களிடமிருந்து எப்படி வாங்க வேண்டும்'' என்றும் சர்வ சாதாரணமாகக் கூறியதுண்டா? ஆனால் நம் நாட்டில் இவை இடம்பெற்றுள்ளன!
சிங்கப்பூர் ஜனநாயக கட்சியாகிய நாங்கள் ஒரு நியாயமான நாடாளமன்ற தேர்தல் முறையையே காண விரும்புகின்றோம்.
2) சிங்கப்பூர் ஜனநாயக கட்சி, சட்டத்திட்டங்களுக்கு எதிரான முறைகளைக் கையாண்டு மாற்றங்களை ஏற்படுத்த முயல்கின்றது
ஜனநாயகமற்ற அரசியல் அமைப்பைக் கொண்ட நம் நாட்டில் மாற்றங்களை உருவாக்குவது சாத்தியமற்ற போது, வன்முறையற்ற பிற வழிகளைத் தான் கையாள வேண்டியிருக்கின்றது.
நம் நாட்டில் தற்போது கிடைக்காத மக்கள் கூட்டமைப்பிற்கும் அவர்களின் பேச்சுரிமைக்கும் தான் நாங்கள் போராடுகின்றோம். நம் அரசாங்கம் நமக்குத் தராத நியாயமான தேர்தல் முறையைப் பெறுவதற்கு இவையே அடித்தளமாக விளங்குகின்றன.
ஆனால் பிஎபி அமைதியான மக்கள் கூட்டனியைத் தொடர்ந்து கலைத்து வருகின்றது. இவ்வாறான சட்டங்களை மக்களின் மீது விதிப்பதால் பிஎபி தான் சட்டத்திட்டங்களுக்கு எதிரான முறைகளைக் கையாண்டு வருகின்றது. சிங்கப்பூர்க் குடிமக்களாகிய நாம் நம் உரிமைக்குப் போராடி, பிஎபி விதிக்கும் இவ்வாறான சட்டங்களை அனுமதிக்கக் கூடாது. நமது தனிப்பட்ட உரிமையைக் காக்க நாம் தானே போராட வேண்டும்?
3) நம் நாட்டிலுள்ள சட்டத்திட்டங்களை மீறுவதையே சிங்கப்பூர் ஜனநாயக கட்சி ஆதரிக்கின்றது
நாம் முதலாவதாக ஒன்றை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு சட்டம் பிடிக்கவில்லை என்பதற்காக எந்த ஒரு குடிமகனும் சட்டத்தை மீறுவதில்லை. மக்களின் பொது தேவையைப் பூர்த்திச் செய்பவற்றைச் சட்டம் எனும் பெயரில் மக்களிடமிருந்து பறித்துக்கொள்ள பிஎபி-வுக்கு எந்த ஒரு உரிமையுமில்லை.
குறிப்பாகக் கூறினால் பிஎபி தான் நம் நாட்டின் சட்டத்திற்கு எதிராக நடந்து கொண்டு அதிலிருந்து தப்பி செல்கின்றது. 15 மார்ச் 2008இல் சிங்கப்பூர் நுகர்வோர் சங்கத்தை (Consumers Association of Singapore 'CASE') ஐச் சார்ந்தவர்களை அவர்களின் போராட்டத்தைத் தொடர அனுமதி கொடுத்தது. ஆனால் அதே போராட்டத்தைச் செய்த ' தாங்க முடியவில்லை ' (Tak Boleh Tahan) ஐச் சார்ந்தவர்களைக் காவலதிகாரிகள் கைது செய்தனர். பிஎபி செய்த இக்காரியும் நம் சட்டத்திலுள்ள 12பிரிவின் கீழ் எல்லோருக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் எனும் கூற்றுக்கு எதிராக உள்ளது. நமக்குச் சேர வேண்டிய சம உரிமைக்காக நாம் போராடுகின்றோம். இது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதையே நாங்கள் செய்கின்றோம். எந்த ஒரு ஜனநாயக சமுதாயத்திலும் ஆளும் கட்சி இவ்வாறு முத்திரையிடும். இதுவே நம் நாட்டிலும் நிகழ்ந்து வருகின்றது.
4) நமக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற விரிவான ஆலோசனைகளைச் சிங்கப்பூர் ஜனநாயக கட்சி கொடுப்பதில்லை
இக்கருத்துத் தவறென்பதற்குப் பல ஆதாரங்களை மேற்கோள் கட்டலாம். சிங்கப்பூர் ஜனநாயக கட்சியைப் பற்றி பிஎபி பரப்பிய மற்றொரு வதந்தி தான் இது.
1994ஆம் ஆண்டிலேயே நம் கட்சி Dr Chee Soon Juan எழுதிய Dare to Change: An Alternative Vision for Singapore எனும் நூல் நம் அரசாங்கம் கையாளக் கூடிய எத்தனையோ யோசனைகளைக் குறிப்பிடப்பட்டிருந்தன.
இவ்வாலோசனைகள் Your Future, My Faith, Our Freedom: A Democratic Blueprint for Singapore, A Nation Cheated, The New Democrat போன்ற நூல்களிலும் வெளியீடுகளிலும் மிக விரிவாகக் எடுத்துக் கூறப்பட்டன. மேலும், Our Manifesto , மற்றும் மிகச் சமீபத்தில் தொடங்க பட்ட
Budget proposal ஆகிய இணையப்பக்கங்களிலும் இவ்விவரங்களைக் காணலாம். ஆனால் நம் அரசாங்கம் இவற்றை ஊடகங்களில் வெளியிட தடை செய்து விட்டதால் நாங்கள் கையாண்டிருக்கும் இம்முயற்சிகளைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவதில்லை. இதை ஒரு சாக்காகப் பயன்படுத்தி கொண்டு எங்களைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்புகின்றது, பிஎபி.
5) சிங்கப்பூர் ஜனநாயக கட்சி மனித உரிமையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்து பொருளாதார பிரச்சினைகளைப் புரக்கணிக்கின்றது.
அதிகரித்து வரும் பொருளாதார பிரச்சினையைக் கண்டிப்பாக எங்களின் கவனத்தில் நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை இவ்விணையப்பக்கத்தின் மூலம் கண்டறியலாம். அதிகரித்து வரும் உடல்நல பராமரிப்புச் செலவுகள், போக்குவரத்துக் கட்டணங்கள், CPF சேமிப்புகள் போன்ற விவரங்கள் இங்கு அடிக்கடி பேச படுகின்றன.
இன்றும் நடைபெற்று வரும் ' தாங்க முடியவில்லை ' (Tak Boleh Tahan) எனும் போராட்டமே இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். இதன் முக்கிய நோக்கம் நம் நாட்டின் பொருளாதாரத்தை மக்களின் தகுதிக்கேற்ப மாற்றியமைக்க வேண்டுமென்பதே ஆகும். தேர்தல்களின் போதும் நாங்கள் சிங்கப்பூரில் இல்லாத குறைந்த ஊதியம் பிரச்சினை, அதிகரித்து வரும் வேலை நீக்கங்கள் ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் தந்து வருகின்றோம்.
ஆனால் மறுபடியும் நாம் கூறுவதை நம் அரசாங்கம் தடை செய்வதால் பொது மக்களுக்கு நாங்கள் கூறும் இம்முக்கிய செய்திகள் எட்டாமல் போய்விடுகின்றது. இவ்வாண்டின் வரவுசெலவு திட்டத்தை மாற்றியமைப்பதற்காக நாங்கள் கொடுத்த மணுவை அரசாங்கம் நிராகரித்து விட்டது.
அதே வேளையில் மக்களுக்குச் சேர வேண்டிய சம உரிமையிலும் சிங்கப்பூர் ஜனநாயக கட்சி கவனம் செலுத்துகின்றது. இவ்விரு அம்சங்களுமே ஒரே இலக்கிற்குத் தான் ந்ம்மைக் கொண்டு செல்கின்றன. மக்களின் வாழ்க்கை முறையைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் கலந்துரையாட வேண்டுமென்றால் அதற்கு மக்கள் பேச்சுரிமையை நம் அரசாங்கம் கொடுக்க வேண்டும். இப்பேச்சுரிமை இல்லையெனில் நம்மால் மக்களுடன் தங்களின் பிரச்சினைகளைக் குறித்துக் கலந்துரையாட இயலாது.
சிங்கப்பூர் ஜனநாயக கட்சி - உங்கள் குரல், உங்கள் கட்சி
|
|
Danny the Democracy Bear
|
|
|
 Now available online here! |
|
Awesome Words
“Only those who dare to fail greatly can ever achieve greatly.” Robert Kennedy
News feeds
|