|
Tuesday, 28 April 2009 |
சிங்கப்பூர் ஐனநாயகளாளர்கள்
பத்துச் சக வழிப்போக்கர்களிடம் ''நாளைய செய்தித்தாள்களில் நம் புகைப்படங்கள் வருவதற்கு முன் இந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு விடுவோம்'' எனக் கூறியபடியே அந்த நாற்பது வயதுடைய ஆசாமி, கிளார்க் கீ இரயில் நிலையத்திற்கு விரைந்தார். அவர் இவ்வாறு கூறுவதற்குத் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த செய்தித்தாள் புகைப்பட நிருபரே காரணம்.
பேச்சாளர் சதுக்கத்தில் அவ்வாசாமியும் அங்கு கூடியிருந்த மற்றவர்களும் ''தமிழைத் தவிர்த்தல்'' எனும் தலைப்பில் உரையொன்று நிகழப்போவதாக எண்ணியிருந்தனர். ஆனால் குருன்செய்திகளின் வாயில் பரவியிருந்த தகவலின் படி மாலை 6மணிக்குத் தொடங்கவிருந்த அவ்வுரை, பொதுக் கூட்ட சட்டத்தின் (Public Entertainment and Meetings Act) கீழ், காவல் துறையினரால் தடுக்கப்பட்டது.
அவ்வுரை தடுக்கப்பட்ட போதிலும் சுமார் 50 பேர் அங்குத் திரண்டிருந்தனர்.
சில பொதுச்சேவையாளர்களையும் இரு செய்தியாளர்களையும் தவிர வேறு யாரும் பேச்சாளர் சதுக்கத்தின் மையப்பகுதியான புல் வெளிக்குள் செல்லவில்லை. சிங்கையில் தமிழ் மொழியின் நிலையைப் பற்றி அங்குக் கூடியிருந்தவர்கள் தங்களுக்குள்ளேயே கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
சாங்கி விமான நிலையத்திலும் சிங்கைத் தீவு முழுவதிலுமுள்ள அறிவிப்புப் பலைகைகளில் தமிழ் இடம்பெறாததைக் கண்டு வருத்தத்திற்குள்ளாகிய ஒரு வீட்டுத் தரகரும் அவரின் நண்பர்களும் இவ்விஷயத்தைப் பற்றி கலந்துரையாட பேச்சாளர் சதுக்கத்தில் உரையாடுவதற்காகத் திட்டமிட்டனர். பேச்சாளர் கூட்டத்தில் உரையாடுவதற்கான அனுமதி வழங்கும் உரிமை, தேசிய பூங்காவிடம் (NParks) சென்றது. ஆனால் அனுமதி வழங்கப்படாததால், ஏற்பாட்டாளர்கள் அங்கு வருகையளிக்கவில்லை.
நடக்கவிருந்த உரை தடுக்கப்பட்டதறியாமல் ஐந்து தேசிய பலதுரை மாணவர்களும் அங்கு வந்திருந்தனர். ''மொழி என்பது மதத்திற்கும் இனத்திற்கும் அப்பாற்பட்டது. ஆகையால் மதத்தையும் இனத்தையும் காரணமாகக் கொண்டு ஏன் இவ்வுரையைத் தடுக்க வேண்டும்?'' என அம்மாணவர்களுள் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
மிகுந்த ஆவேசத்தோடிருந்த 60வயது பெரியர் ஒருவர், ''இன்று காலையிலிருந்து பல முன்னனி தமிழ் அமைப்புகளையும் நபர்களையும் இதனை முன்னிட்டுத் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்தைக் கேட்டேன். ஆனால் யாரும் தங்களின் கருத்தைத் தெரிவிப்பதற்கு முன் வரவில்லை.'' எனக் கூறி பெருமூச்சு விட்டார். மற்றொருவர் ''மக்கள் செயல் கட்சியினுள்ள நம் இந்திய தலைவர்கள் கூட இதைப் பற்றி பேசுவதற்குத் தயாராக இல்லை.''
இரவு 9மணி வரை மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
பேச்சாளர் சதுக்கம் மீண்டும் அமைதியைப் பற்றிக்கொண்டது.
|
|
Danny the Democracy Bear
|
|
|
 Now available online here! |
|
Awesome Words
“To stand in silence when they should be protesting makes cowards out of men.” Abraham Lincoln
News feeds
|